Onam: மாணவர்களுக்குத் தலா 5 கிலோ அரிசி!

Advertisements

Onam | Kerala

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்குத் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகைக்காகக் கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *