NayantharaVignesh: தங்க சிலைபோல மின்னும் நயன்தாரா உடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.!

Advertisements

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் நயன்தாரா மற்றும் கணவர்-இயக்குனர் விக்னேஷ் சிவன் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் காதலிக்க தொடங்கினார்கள்.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் 2023ம் ஆண்டு ஜுன் மாதம் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தத் தம்பதிகளுக்கு உயிர், உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாகத் தயாரிப்பு தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் டுடே வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனை எல்.ஐ.சி படத்தில் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமான் நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் போட்டோசூட் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *