
கடையநல்லூரில் மழையில் குறுக்கீட்டதால் தேசிய தவ்ஹீத் அமைப்புப் பொதுக்கூட்டம் பாதியில் முடிந்தது.
தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் தேசிய தவ்ஹீத் அமைப்பின் சார்பில் அரபிக் கல்லூரி மாணவிகளுக்குப் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் காயிதேமில்லத் திடலில் நடைபெற்றது.
ஹிலால் கமிட்டி தலைவர் சதாம் ஹுசைன் மற்றும் மஸ்ஜிதுர் ராஷித் இமாம் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார், இறுதியில்தேசிய தவ்ஹீத் அமைப்பின் நிறுவனத் தலைவர் இஸ்லாமிய தமிழ் அறிஞர்பீ. ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார், இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கொட்டும் மழையில் நனைந்தவாறு கலந்து கொண்டனர்,
திடீரெனச் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர், இதனால் கூட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது
கூட்டத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஐவேளையும் தொழுகை நடத்தி வந்த பாபரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளி, பிற்பாடு நீதிமன்றத்தின் அநியாய துணையோடு அந்த இடத்தை முஸ்லிம்களிடமிருந்து முழுமையாக அபகரித்து, ராமர் கோவில் என்ற பெயரில் நடக்கும் உலக மகா அநீதியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்,
தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்பத் தற்போதைய இடஒதுக்கீடை 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையே மீண்டும் வேண்டும்’ எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


