
ராஜபுத்திரர்களின் படைப்பில் மிக அழகான இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்று நாகர்கர் கோட்டை.
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் ஜெய்பூர் நகரத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடர் முனையில் அமைந்துள்ளது. நாகர்கர் கோட்டை அருகில் ஜெய்கர் கோட்டை மற்றும் ஆம்பர் கோட்டைகள் அமைந்துள்ளது. மன்னர் நாகர்சிங் பொமிய என்பவரால் இக்கோட்டைக்கு நாகர்கர் என பெயராயிற்று.
வரலாறு;
ஜெய்பூர் நகரத்தை நிறுவிய ஜெய்பூர் மன்னர் சவாய் இரண்டாம் ஜெய்சிங் என்பவர், மராத்தியப் படைகளையும், ஆங்கிலக் கம்பெனிப் படைகளை எதிர்கொள்ளவும், கிபி 1734-ல் நாகர்கர் கோட்டையை நிறுவினார். 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குடும்பங்கள் இக்கோட்டையில் பாதுகாப்பாக தங்கினர். 1868ல் நாகர்கர் கோட்டை விரிவு படுத்தப்பட்டது. 1883-92ல் நாகர்கர் கோட்டையில் மூன்றை லட்சம் ரூபாய் செலவில் அரண்மனைகள் கட்டப்பட்டது.

ஜெய்ப்பூர் மன்னர் சவாய் மதோ சிங், அரண்மனை குடும்பத்தினர்களுக்காக, கோட்டையில் பல அறைகளுடன் கூடிய அரண்மனை கட்டினார். முதலில் இக் கோட்டையானது அமைதிக்காகவும் மேல்தட்டு மக்கள் தங்குவதற்காகவும் கட்டப்பட்டது. அரண்மனை மாடத்திலிருந்து பார்த்தால் ஜெய்பூர் நகரமே தெரியும்படி அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
மேலும் இக் கோட்டையானது ஐரோப்பியர்கள் தங்குவதற்காகவும், ஆங்கிலேயர்கள் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேய அதிகாரிகளின் குடும்பங்கள் இங்கு பதுங்கியிருந்துள்ளதாக தெரிகிறது.

இக் கோட்டையானது பழைய மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. ஆரவல்லி மலைத்தொடர் மீது அமைந்துள்ளது இதன் சிறப்பு . இதனால் இதன் மீது நின்று பார்த்தால் முழு நகரமே தெரியும் சிறப்பு வாய்ந்தது.
கலைநயம்;
கலை நயமிக்க வேலைப்பாடுகள் அமையப் பெற்றுள்ளது. இந்தோ- அமெரிக்க கலை வேலைப்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளது. இடது புறம் அமைந்துள்ள தாடி கேட் டில் ஒரு கோவில் அமைந்துள்ளது. நாகர் சிங் இளவரசர் ரத்தோர் சிங்குக்கு வணங்குவதற்காக கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

1944 வரை அரசாங்க உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்டது. சாம்ராட் யந்த்ரா, ஜந்தர் மந்தர் இடங்களில் போர்க் காலங்களில் துப்பாக்கி சுடுவதற்காக மாடங்கள் பயன்படுத்தப்பட்டது. ராயல் கைய்டர் தூண்கள் மிகவும் பிரசித்தம்.
தங்குவதற்கு படாவ் விடுதி, உணவு விடுதி போன்ற வசதிகள் உள்ளன. ரயில் பேருந்து, விமான போக்குவரத்து வசதிகள் உள்ளது. மேலும் அமர் கோட்டை, ஆல்பர்ட் ஹால் மியூசியம், ஹவா மஹால் ஆகியவை அருகிலுள்ள கோட்டைகளாகும்.


