
பீகார் தேர்தலில் முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை நிராகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பீகார் மக்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, நாடு ஏற்கனவே இந்த முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை நிராகரித்துள்ளது என்றும் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பீகார் தேர்தல் சாதிவாத விஷத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது என்றும் இது நாட்டிற்கு மிகவும் பிரகாசமான அறிகுறியாகும் என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தலித் மக்கள் அதிகம் உள்ள 38 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் பீகார் தேர்தலின்போது, ஜாமினில் வெளி வந்த அரசியல்வாதிகளும், அவர்களுடைய கூட்டாளிகளும் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று மசோதாவை பொது வெளியில் கிழித்தனர் என்றும் தெரிவித்தார்.
இதனால், பீகார் மக்கள் வகுப்புவாத விஷத்தை முற்றிலுமாக நிராகத்துள்ளனர் என்றும் கூறினார்.


