
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பெற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலைத் தயாரித்து வரும் போர்ப்ஸ் நாளிதழ் 2023ம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்கார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் 100 பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலருடன் முதல் பணக்காரராக உள்ளார். அவரைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 68 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும், ஹெர்.சி.எச். டெக் நிறுவனர் ஷிவ் நாடார் 29.3 பில்லியன் டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இவர்களைத் தவிர 24 பில்லியன் டாலருடன் ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் 4வது இடத்திலும், அவென்யூ சூப்பர் மார்க்ஸின் ராதாகிஷன் தமானி 23 பில்லியன் டாலருடன் 5வது இஅத்தில் உள்ளது. இவர்களைத் தவிர சைரஸ் பூனவல்லா, இந்துஜா குழுமத்தின் இந்துஜா, திலீப் ஷங்வி குமார் பிர்லா, ஷபூர் மிஸ்ட்ரி பணக்கார வரிசையில் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலிலிருந்து 8 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 8 பேர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். துபாயை தலைமையிடமாகக் கொண்டு சில்லரை வணிகத்தை நடத்தி வரும் ரேணுகா ஜக்தியானி, ஏசியன் பெயிண்ட்சின் டானி குடும்பத்தினர் இந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


