Vijayabaskar:விடாமல் துரத்தும் சிபிசிஐடி… ஓடி ஒளியும் எம்.ஆர் விஜயபாஸ்கர்-ஆதரவாளர்கள் வீட்டிற்குள் புகுந்து போலீஸ்!

Advertisements

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி சான்றிதழ் கொடுத்துப் பத்திரபதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில், இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கு

100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்தவர்கள்மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். இந்தப் புகாரின் 7 பேர்மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமின் மனு இன்று தீர்ப்பு

இந்த வழக்கில் தன்னையும் குற்றவாளியாகச் சேர்க்கப்படலாமென நினைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைக் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விஜயபாஸ்கர் தலைமறைவானர். சிபிசிஐடி போலீசார் பல இடங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சூழ்நிலையில் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிபிசிஐடி சோதனை

தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டிருந்தார். இந்த மனுமீது இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் இன்று காலை 08.00 மணி முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டிலும், வேலாயுதம்பாளையம் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *