
இசுலாமிய மக்களின் வாக்குகளை மொத்தமாகப் பறிப்பதற்கான திட்டம்தான் காசா மக்கள் மீதான முதலமைச்சரின் திடீர்க் கருணையும், கண்ணீரும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கேவல நாடக அரசியலை, ஏமாற்று அரசியலை, சூழ்ச்சி அரசியலை எத்தனை காலத்திற்குச் செய்து கொண்டே இருப்பீர்கள்? என்று வினவியுள்ளார்.
உண்மையிலேயே உங்களுக்கு மானுடப் பற்று இருந்தால், காசா மீது முதல் தாக்குதல் நடந்தவுடனே நீங்கள் கதறித் துடிக்காமல் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்தது எதனால்? என்றும் வினவியுள்ளார்.
இலட்சக்கணக்கில் தமிழர்களை இனப்படுகொலை செய்வதைப்பற்றிக் கவலைப்படாமல், கொன்று குவித்தவர்கள் உடனேயே கூட்டணி வைத்து, இன்றளவும் அதிகாரத்தை, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், இன்றைக்குக் காசாவுக்காகக் கருணை காட்டுவது போல், நடிப்பதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.
