இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Advertisements

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்:

2024 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்திகள் மற்றும் கவிதைகளை இந்தப் பக்கத்தில் காணலாம். அசத்தலான Christmas Wishes(கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்) இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்:

உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர்மீது போடுங்கள், ஏனென்றால் அவர் உங்களைக் கவனித்துக்கொள்கிறார் – 1 பேதுரு 5:7 – இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

வரலாற்று ரீதியாக மேற்கு உலக நாடுகளில் பன்னிரண்டு நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டம் ஆகும் இது. கிறிஸ்மஸ் தினம் என்பது பல நாடுகளில் பொது விடுமுறையாகவும் கொண்டாடப்படுகிறது.

மகிழ்வோம். மகிழ்வோம் தினம் மகிழ்வோம் இயேசு ராஜர் நம் சொந்தமாகிறார்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ், வழியெங்கும் ஜிங்கிள்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

ஐதீகம்படி தேவதூதர்கள் இந்தச் செய்தியை மேய்ப்பர்களிடம் அறிவித்தனர். பின்னர் அவர்கள் செய்தியைப் பரப்பினர். இந்த நாளே பின்பு கிறிஸ்துமஸ் ஆனது.

மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய ரத்தம்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

மெரி கிறிஸ்துமஸ் வாழ்த்து:

தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் என்பது ஜீசஸை வழிபடும் கொண்டாட்டம். சர்ச்சில் மக்கள் வழிபடுவதோடு… ப்ளம் கேக் செய்து கொண்டாடுவது, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவது, மக்களுக்கு உதவி செய்வது வீடுகளை அலங்கரிப்பது, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தமிழ் ஆங்கிலத்தில் பகிர்வது என்று கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டுக் கொண்டாடுவது, வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிப்பது என்றும் கொண்டாடும் வழக்கம் உள்ளது.

கிறிஸ்துமஸ் வரலாறு:

இப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்திகள், Merry Christmas Greetings, Christmas Eve Wishes, Merry Christmas Wishes Images, Christmas Greetings Images, இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் பகிர வேண்டிய கிறிஸ்துமஸ் தமிழ் வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் கவிதைகளை இந்தப் பக்கத்தில் காணலாம். அசத்தலான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இதை உங்கள் உறவினர்களிடம் பகிர்ந்து இந்த நாளைக் கொண்டாடுங்கள்!

கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழாவாகும். உலகம் முழுக்க அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. டிசம்பர் 25 அன்று உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களிடையே மத மற்றும் கலாச்சார கொண்டாட்டமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

கிறிஸ்தவத்தின் மிக முக்கியமான பண்டிகை கொண்டாட்டம் ஆகும் இது. இப்போது தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் இது 1-2 நாள் கொண்டாட்டமாக இருந்தாலும். கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள பல மாநிலங்களில் 10- 12 நாள் கொண்டாட்டமாகவும் கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் நேட்டிவிட்டி என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் பண்டிகையின் கதை கொடுக்கப்பட்டு உள்ளது. மேசியானிய தீர்க்கதரிசனங்களின்படி இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. ஜோசப் மற்றும் மேரி நகரத்திற்கு வந்தபோது.. அவர்கள் தங்க இடமில்லை. அவர்கள் ஆடு, மாடு தொழுவம் ஒன்றில் தங்கி இருந்த போதே குழந்தை பிறந்தது.

கிறிஸ்துமஸ் வாழ்த்துப் படங்கள்:

இயேசுவின் பிறந்த தேதிகுறித்து பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் உள்ளன. இயேசுவின் பிறந்த தேதி டிசம்பர் 25 என்று ரோமானிய அரசர்களால்தான் முதலில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பிறப்பு தேதி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்த ரோமானியப் பேரரசு ஆட்சி காலத்தில் உறுதி செய்யப்பட்டது. வேறுசில பேரரசுகள் வேறுசில நாட்களைக் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடியது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல… உலகம் முழுக்க டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சில கிறிஸ்தவர்கள் ஜனவரி 7ம் தேதியைக் கூடக் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடும் வழக்கம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *