
Manipur Violence | School | Reopen
மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன...
இம்பால் : மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மணிப்பூரில் அமைதி திரும்பப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அங்குப் படிப்படியாக இயல்புநிலை திரும்பிவரும் நிலையில், அங்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.


