
நடிகை மாளவிகா ஷர்மாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல தென்னிந்திய நடிகையும் மாடலுமான மாளவிகா சர்மா தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் சட்டம் பயின்று வழக்கறிஞராக இருக்கிறார்.
நெலா டிக்கெட் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் மாளவிகா ஷர்மா. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவர் ரவி தேஜா உடன் இணைந்து நடித்தார்.
இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான ரெட் என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்தார். இதில் ராம் பொத்தினேனி உடன் இணைந்து நடித்தார்.
தொடர்ந்து 2022-ம் ஆண்டு வெளியான காஃபி வித் காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் இந்தப் படத்தில் தியா என்ற கேரக்டரில் நடித்த மாளவிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் இவர் நடிப்பதாகத் தகவல் பரவவே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார் மாளவிகா.
மாடலிங் துறையில் அதிக ஆர்வ கொண்ட அவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு ப்ளூ இந்தியா பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்.
தற்போது பாலிவுட் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும் ஹரோம் ஹரா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படு கிளாமராக இருக்கும் அவரின் போட்டோவுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.



