மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக புகார்.. நடந்த 6 மணிநேரம் விசாரணை..!

Advertisements

தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் மீது நேற்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை கமிஷனர் வனிதா 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 29ம் தேதி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனது தாயுடன் புகார் ஒன்று அளித்தார்.

முதல் மனைவி சுருதியிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும், என்னை புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணையாக என்னை அவர் விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். உடனடியாக எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கூறினார். 2024ல், நான் கர்ப்பமானேன், மாதம்பட்டி ரங்கராஜ் என்னை மிரட்டி கருக்கலைப்பு செய்தார். பின்னர் மீண்டும் டிசம்பர் 2024 ல், நான் கர்ப்பமானேன். மறுபடியும் அவர் குழந்தையை கருக்கலைப்பு செய்ய என்னை கட்டாயப்படுத்தி கலைத்தார்.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் என்னை அடித்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளது. அதை நான் வெளியிட விரும்பவில்லை. எனவே, என்னை திட்டமிட்டு திருமணம் செய்து ஏமாற்றி குழந்தை கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா நேற்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *