Lok Sabha Election 2024: 175 பேர் வேட்பு மனு தாக்கல்!

Advertisements

உத்தரபிரதேசத்தில் 2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 175 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

லக்னோ:நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் 175 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 8ம் தேதி இறுதிநாள் என்பது குறிப்பிஅத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *