
கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவனை ஜூலை 19ஆம் நாள் வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த பரமானந்த ஜெயின் என்பவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் இருவரும் உடன்பட்டுத்தான் உறவுகொண்டதாகத் தெரிவித்துள்ளான்.
அதன் மூலம் குற்றம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும், மருத்துவ ஆய்வில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவனை ஜூலை 19 வரை காவலில் வைத்து விசாரிக்கக் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.


