Kodanad Robbery And Murder Case: விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்!

Advertisements

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9 -ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்தப் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டுக் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்தச் சம்பவத்தைச் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரைக் கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டிச் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.

விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி. ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. முந்தைய விசாரணையின்போது 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையைச் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களில் சயான், வளையார் மனோஜ்குமார், உதயகுமார் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். எனவே வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9 -ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *