
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு UNRWA சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் (நெசெட்) பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) என்பது ஒரு நிவாரண மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பாகும்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “நெசெட் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட UNRWA சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் உத்தரவைச் செயல்படுத்துவதில் எந்தவொரு தடையும் இல்லை,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2024-இல், இஸ்ரேல் பாராளுமன்றம் UNRWA-இன் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
