Karti Chidambaram: பரமஹம்ச ஆச்சார்யாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்!

உதயநிதியின் தலைக்கு 10 கோடி அறிவித்த பரமஹம்ச ஆச்சார்யாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்…

சனாதனம்…சண்டையில் ஒடிக்கொண்டிருக்கிறது…சமயம் சார்ந்ததா ??அமைச்சர் உதயநிதி கொளுத்தி போட்ட சனாதனம்குறித்த கருத்து. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

சனாதனம் கொசு, டெங்கு, கொரொனா போன்று கொடிய நோய் அதனை வேரோடு வெட்டி அழிக்க வேண்டும் என்று உதயநிதி சொன்னாலும் சொன்னார், அவரது கருத்து இந்துக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.சனாதன தர்மத்தின் மீது மிகுந்த மரியாதையும், அதனைக் கடைபிடித்து வரும் இந்துக்கள் உதயநிதியின் கருத்துக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் நிலையில், பிரபலங்கள், இந்து மத தலைவர்கள், போதகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது இவர் பேச்சு. இந்நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம், உதயநிதியின் கருத்துக்கு ஒத்துப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

அயோத்தியைச் சேர்ந்த பரஹம்ச ஆச்சாரியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி அறிவித்து இருந்தார். இதுபற்றிக் கூறும்போது கார்த்திக் சிதம்பரம் அந்தப் பரமஹம்ச ஆச்சார்யா பகிங்கரமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே அவரைத் தமிழ் நாடு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *