Kanchipuram:இணைந்து வாழ மறுத்ததால் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு- கணவர் வெறிச்செயல்!

Advertisements

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.

இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *