Kamal Haasan Pongal Treat: போட்டியாளர்களுக்கு ட்ரீட் வைத்துக் கொண்டாட்டம்!

Advertisements

உலக நாயகன் கமல் ஹாசன், ‘பிக்பாஸ் சீசன் 7’ போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியாளார்களுக்கு படு பிரமாண்டமாக ட்ரீட் வைத்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து  சாமர்த்தியமாகத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கடந்த 6 சீசன்களை காட்டிலும், சில வித்தியாசங்களைப் புகுத்திச் சீசன் 7 நிகழ்ச்சியை லான்ச் செய்தனர் பிக்பாஸ் குழுவினர்.

குறிப்பாக இந்த முறை, இரண்டு வீடுகள் மற்றும் கேமராவின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.அதே போல் இந்த முறை, கமல்ஹாசன் தன்னுடைய சம்பளத்தை 100 கோடியிலிருந்து 150 கோடிக்கு உயர்த்தியதாகவும் கூறப்பட்டது.

பிரச்சனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த… பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில், இதில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்த அர்ச்சனா, வெற்றி கோப்பையைத் தட்டி சென்றார். இரண்டாவது இடத்தை மணி சந்திராவும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்தனர். அதே போல் தினேஷ் 4-ஆவது இடத்தைப் பிடிக்க, விஷ்ணு 5-ஆவது இடத்தைக் கைப்பற்றினார்.

கடந்த பிக்பாஸ் சீசன்களில் கமல் சந்திக்காத விமர்சனங்களை இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தித்தார். குறிப்பாக, தீர விசாரிக்காமல் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பட்டது. மற்றும் வினுஷா விஷயத்தைப் பற்றி ஓபனாகப் பேசாதது, மாயா விஷயத்தில் ஒரு தலை பச்சமாகச் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஒரு வழியாகப் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவடைந்து விட்ட நிலையில், கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னாடி நின்று, நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக உள்ள அனைவருக்கும் தடபுடலாகப் பொங்கல் விருந்து வைத்துள்ளார். ஏகப்பட்ட வெரைட்டியுடன், கமல் வைத்த தலைவாழலை விருந்தில்… கமல்ஹாசனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *