Kajal Aggarwal: குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி!

Advertisements

இந்தியன் 2 படத்தின் நாயகி காஜல் அகர்வால், உடல் எடையைக் குறைத்த பின் நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேரரசு இயக்கிய பழனி படம்மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்த இவர், பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் பெரியளவில் ஹிட் ஆகாததால் டோலிவுட் பக்கம் சென்றார் காஜல்.

அங்கு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக அவர் நடித்த மகதீரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. காஜலின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அப்படம் அமைந்தது. பின்னர் சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல அப்டத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார் காஜல்.

நான் மகான் அல்ல வெற்றிக்குப் பின்னர் இந்தியின் சிங்கம், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாகப் பிசினஸ்மேன், தமிழில் விஜய்யுடன் துப்பாக்கியென இவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயின் எனப் பெயரெடுத்தார் காஜல் அகர்வால்.

பின்னர் தமிழில் டாப் ஹீரோவாக வலம் வரும் அஜித்துக்கு ஜோடியாக விவேகம், தனுஷுடன் மாரி, விஜய்யுடன் மெர்சல், ஜெயம் ரவி ஜோடியாகக் கோமாளியென வரிசையாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கோலிவுட்டின் சென்சேஷனல் ஹீரோயினாக உருவெடுத்தார்.

சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2020-ம் ஆண்டுத் திருமணம் ஆனது. கவுதம் கிச்சிலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2022-ம் ஆண்டு நீல் என்கிற ஆண் குழந்தை பிறந்தது.

திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காஜல் அகர்வால், தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த பகவத் கேசரி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தற்போது நடிகை காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை கூடியிருந்த காஜல் அகர்வால், தற்போது மீண்டும் ஸ்லிம்மாகி இருக்கிறார். உடல் எடையைக் குறைத்த கையோடு கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி இருக்கிறார் காஜல்.

வெள்ளை நிற லெஹங்காவில், உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி காஜல் அகர்வால் நடத்தியுள்ள அந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் செம்ம வைரலாகி வருகிறது. காஜல் அகர்வாலின் இந்தக் கிக்கான கிளாமர் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *