
K. Annamalai
சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் படம் எடுக்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்…
கன்னியாகுமரி: தமிழக பாஜக தலைவர் அண்ணமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வன்முறையைத் தூண்டும்படி எடுக்கும் சாதிய படங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகிறார். ரெட் ஜெயண்ட் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய ரீதியாகப் படம் எடுக்கிறார்கள்.
பல்வேறு இடங்களில் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. சாதிய வன்முறைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். 2047-ல் இந்தியா வல்லரசு நாடாகக் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

