
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் யார் முன்னிலையில் உள்ளனர் என்பது பற்றி விபரங்கள் வெளியாகி உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி, பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் முன்னிலை வகிக்கிறார். கண்டே தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா பின்னடைவில் உள்ளார்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த, தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (நவ.,23) எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் களத்தில் இறங்கிய முக்கிய வேட்பாளர்களில் முன்னிலையில் இருப்பது யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
சம்பாய் சோரன் – (பா.ஜ.க, )
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ., சார்பில், செரைகெல்லா தொகுதியில் போட்டியிட்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி சார்பில், களம் இறங்கிய கனேஷ் மகாலி 9,823 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். சம்பாய் சோரன் 6,837 ஓட்டுக்கள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்சா)
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 5,908 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 2ம் இடத்தில் உள்ள பா.ஜ.க, வேட்பாளர் கமாலியேல் ஹெம்ப்ரோம் 3,096 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
மஹுவா மஜி (ஜார்க்கண்ட் முக்தி மோர்சா)
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி சார்பில், ராஞ்சி தொகுதியில் மஹுவா மஜி போட்டியிட்டார். இவர் 2,726 ஓட்டுக்கள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பா.ஜ., வேட்பாளர் சந்திரேஷ்வர் பிரசாத் சிங் 5,631 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கல்பனா சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்சா)
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி, கல்பனா சோரன் கண்டே தொகுதியில் போட்டியிட்டார். இவர் 3,965 ஓட்டுக்கள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பா.ஜ.க, வேட்பாளர் 7,093 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
சுனில் சோரன் (பா.ஜ.க,)
பா.ஜ., சார்பில், சுனில் சோரன் தும்கா தொகுதியில் போட்டியிட்டார். இவர் 16,998 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அஜோய் குமார் (காங்கிரஸ்)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், அஜோய் குமார் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவர் 2,448 ஓட்டுக்கள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பா.ஜ. க, வேட்பாளர் பூர்ணிமா சாஹு 7,590 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பன்னா குப்தா (காங்கிரஸ்)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், பன்னா குப்தா ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். இவர் 3,010 ஓட்டுக்கள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.

