Jaffer Sadiq – Drug Smuggling Case: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Advertisements

தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை: டெல்லியில் கடந்த பிப்.15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இதையடுத்து தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மார்ச்.9-ந்தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்.9-ந்தேதி சோதனை நடத்தினர். ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *