IT Raid And ED Raid: ஒரே நேரத்தில் சோதனை!

Advertisements

சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கெமிக்கல்  நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில்,  புரசைவாக்கம்  பகுதியில் உள்ள டி.வி. எச்லும்பானி  ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அந்தக் குடியிருப்பில் 4வது தளத்தில் வசிக்கும், அரசு ஒப்பந்தங்களுக்கு மின் சாதனங்களை  விநியோகிக்கும்  அமித் என்பவரின் வீட்டில்  இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயின் வில்லா அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *