
காசாவில் வீடுகளை இழந்தோர் அந்நகரில் உள்ள விளையாட்டரங்கில் குடிசைகள் அமைத்துத் தங்கியிருந்தனர். அப்பகுதியில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்படக் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் மண்ணில் புதைந்துள்ள உடல்களை வெறுங்கைகளாலும் மண்வெட்டியாலும் தோண்டிக் கண்டுபிடிக்கும் படங்களை பிபிசி வெளியிட்டுள்ளது.
மற்றொரு இடத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் இரவுநேரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அப்பாவிகள் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் இன்று நள்ளிரவு வரை 24 மணி நேரத்தில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் எண்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், நானூற்றுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் ஹமாஸ் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.




