Israel Hamas War Updates: பிட்டு பட நடிகைக்கு எதிர்ப்பு!

Advertisements

பிட்டு பட நடிகைக்கு எதிர்ப்பு!

ஆபாச பட நடிகையான மியா கலிபா, இஸ்ரேல் போர்குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருடன் செய்திருந்த ஒப்பந்தங்களை இரண்டு பிரபல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆபாச பட நடிகை மியா கலிபா தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

அதில், “பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும், நாம் அவர்களுக்குத் துணையாக இல்லை என்றால் அதுதான் தவறு. பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம், அவர்கள் படும் துயரத்தை ரெக்கார்ட் செய்யச் சொல்ல முடியுமா?”, என்று மியா கலிபா குறிப்பிட்டிருந்தார்.


பாலஸ்தீன பயங்கரவாதிகளைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என மியா கலிபா குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.மியா கலிபாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவருடன் போட்டுள்ள தொழில் ரீதியான ஒப்பந்தங்களைக் கனடா நாட்டின் பிரபல வானொலி நிலையம் ரத்து செய்துள்ளது.


அதேபோல அமெரிக்காவின் பிரபல பிளேபாய் நிறுவனமும் அவருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. பிளேபாய் பத்திரிகையில் அவரது பெயர், படங்கள் உள்ளிட்டவற்றை நீக்கும் பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *