தரைவழி தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்…!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று 5ம் நாளாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டனர். Israel-Hamas Conflict
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை 900 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது. காசா எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிப்பு – தரைவழி தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்…!

காசா எல்லையில் இஸ்ரேல் 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளது. மேலும், ராணுவ டாங்கிகள், ஆயுதங்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் காசா எல்லையில் குவித்துள்ளனர். இதன் மூலம் காசா முனைமீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.


