‘விடாமுயற்சி’ படம் இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? வெளியான தகவல்!

Advertisements

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் டீசர் நேற்று இரவு 11.08 மணிக்குப் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அஜர்பைஜான் நாட்டில் உருவாகியிருக்கும் இந்தக் கதை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாகிறது.

’எப்போதும், எல்லோரும் உன்னைக் கைவிட்டாலும் உன்னை நம்புவதை விடாதே’ என்ற டேக்குடன் இந்த டீசர் வெளியாகியுள்ளது. ’விடாமுயற்சி’ பிரபல ஹாலிவுட் படமான ’பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் என்ற விஷயம் வெளியாகியிருக்கிறது. இதன் கதைப்படி, தன் மனைவியுடன் அஜர்பைஜான் சுற்றுலா செல்கிறார் ஹீரோ. அப்போது எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. இதனால், மனைவியை வேறொரு டிரக்கில் ஏற்றிவிட்டு தன் காரைச் சரிசெய்து கொண்டு கிளம்புகிறார். மனைவியை நகர்ப்புறத்தில் இருக்கும் கஃபே ஒன்றில் காத்திருக்குமாறு சொல்கிறார். ஆனால், அங்கே மனைவி காணமால் போக அவரைக் கண்டுபிடிக்கும் கதைதான் ‘விடாமுயற்சி’.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *