
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கள்ளக்காதலனை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வில்லூரை சேர்ந்தவர் குருநாதன்(55). பால் விற்பனை செய்து வருகிறார். இவர் தனது 2வது மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். குருநாதன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து குருநாதன் முதல் மனைவியின் மகன் ராமர்(37) தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் குருநாதனின் 2வது மனைவி மகாலட்சுமி, அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி(49) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், வில்லூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணிக்கும், குருநாதனின் 2வது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த விவகாரம் நாளடைவில் குருநாதனுக்கு தெரியவந்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியுடன் தனது மனைவியை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் சுப்பிரமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகாலட்சுமி திரும்பி வந்து, மீண்டும் தனது கணவர் குருநாதனனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால், மீண்டும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த குருநாதன் மனைவி கண்டித்ததால் கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர். அதன்படி மகாலட்சுமி கோவைக்குச் சென்றதும், சுப்பிரமணி கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது குருநாதனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவருரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

