
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேன்சர் சிகிச்சை சென்டர் விமான நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவே வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மீண்டும் பாஜகவுக்கு வாக்களியுங்கள் எனச் சுசீந்திரத்தில் நடைபெற்ற வாகனத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கட்சியின் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தொகுதிக்குப் பாஜக சார்பில் களம் இறங்கி இருக்கும் பொன் ராதாகிருஷ்ணன் மாவட்டம் முழுவதும் திறந்தவெளி ஜிப்பில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் சென்று சாமி தரிசனம் முடித்தபின்னர் அங்கிருந்து திறந்தவெளி ஜிப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேன்சர் சிகிச்சை மையம் விமான நிலையம் உள்ளிட்ட பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், கடந்து ஐந்து ஆண்டுகளில் இது திட்டங்கள் முடங்கி உள்ளது. எனவே இது போன்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் மக்களுக்குப் பயனளிக்க வகையில் பாஜகவிற்கு வாக்களியுங்கள் எனப் பிரச்சாரம் மேற்கொண்டார் இந்நிகழ்ச்சியில் அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


