
சமீபத்தில், ஒரு நட்சத்திர நடிகை தனது கெட்ட பழக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்டார். இது அவரது ரசிகர்களை அதிர்வலைகளை ஏற்படுத்தியது . கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ”பாப்கார்ன்” மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர சம்யுக்தா.அதில் அவர் ஷைன் டாம் சாக்கோவுடன் நடித்தார்.
பின்னர் ‘பீம்லா நாயக்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.அதன் பிறகு, ‘பிம்பிசாரா’, ‘சார்’ மற்றும் ‘விருபக்சா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிவிட்டார்.தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், சம்யுக்தா சமீபத்தில் தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறினார். தினமும் மது அருந்துவதில்லை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது கொஞ்சம் குடிப்பேன் என்று சம்யுக்தா கூறினார்.
தற்போதைய சினிமா வட்டாரத்தில் நிறைய ஹீரோயின்கள் மது அருந்திவிட்டு படப்பிடிப்பிற்கு வருவதும், மது அருந்தி விட்டு நடிப்பதும் வழக்கமான ஒன்றாக பார்க்க முடிகிறது.இந்நிலையில் இவர் சொன்ன இந்தக் கருத்துக்களும் தற்போது வைரலாகி வருகின்றன.இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வகையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றன

