மாஸ் காட்டும் அஜித்தின் good bad ugly.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Advertisements

அஜித், த்ரிஷா, சிம்ரன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். பொதுவாக அஜித் படம் என்றாலே அவர்களுடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

விண்டேஜ் அஜித்தை காண்பது போல் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் இருந்தன. இதனால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. தமிழகத்தில் காலை 9 மணியளவில் திரையரங்குகளில் படம் வெளியான நிலையில், பலரும் திரைப்படம் குறித்து தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.திரைப்படம் பார்த்த பலரும், இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படம் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த வருடத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் குட் பேட் அக்லி. முன்னதாக, வெளியாகிய விடாமுயற்சி பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்காத நிலையில் குட் பேட் அக்லிக்கு அஜித் ரசிகர்களிடமிருந்து பாஸிட்டிவ் கமெண்ட் வந்துள்ளது படத் தயாரிப்பு குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இந்த படம் விடாமுயற்சியை விட ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *