
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் தொடக்க நாளான நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்மூலம் தங்கம் விலை ரூ.87,000-ஐ கடந்தது.இதனையடுத்து விஜயதசமி தினமான இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதற்கு நேர்மாறாக விலை குறைந்தது. தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, இன்று காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.10,880க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைந்தாலும் ரூ.87,000-ஐக்கு கீழ் குறையவில்லை.அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலையைப் பொறுத்தவரை ரூ.2 உயர்ந்துள்ளது.
வெள்ளி ஒரு கிராம் 163 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,63,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளி விலையைப் பொறுத்தவரை ரூ.1 உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 164 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,64,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
