FIBA Olympic: முதலிடத்தில் இந்திய அணி!

Advertisements

India men’s national basketball team | Basketball Olympics Qualifier

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தோனேஷிய அணியை வீழ்த்திப் புள்ளி பட்டியலில் இந்திய அணி பக்ரைன் அணியுடன் முதலிடத்தில் உள்ளது…

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 90-74 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது. டமாஸ்கஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்குத் தகுதி பெற ஆசிய அணிகளுக்கான முதற்கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள் சிரியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பக்ரைன், கஜகஸ்தான், சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் சிரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.இந்திய அணி தனது முதல் போட்டியில் சிரியாவை 85-74 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி, இந்தோனேஷிய அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 90-74 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்திப் புள்ளி பட்டியலில் பக்ரைன் அணியுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் கஜகஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *