
இந்தியாவின் பெரும்பணக்காரர் தொழிதிபர் அதானி தமிழக தேர்தலை குறித்து வைத்து இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது, டெல்லியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அதானி சந்தித்துள்ளார்.
அப்போது, தேர்தல் செலவுக்காக நீங்கள் பயப்பட வேண்டாம். அமித்ஷா இது பற்றி என்னிடம் தனியாகவே கூறியுள்ளார். உங்களுக்கு வேண்டியது செய்யப்படும் என்று உறுதியும் கொடுத்துள்ளார்.
அதோடு, தன்னை சந்தித்த தமிழக முக்கியப்புள்ளி ஒருவரிடத்தில் அதானி, எடப்பாடி பழனிச்சாமி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஓ. பன்னீர்செல்வத்தை விட எடப்பாடிதான் தலைமைக்கு சரியான ஆள். தற்போதைய தமிழக முதல்வர், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளேன்.
ஆனால், வேலை எதுவுமே நடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அரசில் வேலைகள் நல்லபடியாக நடந்ததாக அதானி சர்டிபிகேட் கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகத்தில் உள்ளதாம்.


