
வரும் அக்டோபர் 9ஆம் தேதி மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் திமுக அரசைக் கண்டித்து, உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது’
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி பேரவை சார்பில், 9.10.2024 – புதன் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, “மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், ஆழுசு திடலில்’’ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. சு.க்ஷ. உதயகுமார், ஆ.டு.ஹ., அவர்கள் தலைமையில், கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் ஊ. சீனிவாசன், ஆ.டு.ஹ., கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. செல்லூர் மு. ராஜூ, ஆ.டு.ஹ., ஆகியோர் துவக்கி வைப்பார்கள். கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், ஆ.டு.ஹ., கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, ஆ.டு.ஹ., ஆகியோர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள்.
திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கழக புரட்சித் தலைவி பேரவை
மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவில் பணியாற்றி வரும் புரட்சித் தலைவி பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

