திமுக – காங் டமால்: 190 தொகுதிகளில் திமுக போட்டி.!

Advertisements
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டன சிபிஐ சிபிஎம் விசிக மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன . கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு மூன்று இடங்களும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களும்,  மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும் , பார்வேர்ட் பிளாக் கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்கள் விடுதலைக் கட்சி ஆதித்தமிழர் பேரவை ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன . அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தான் அதிகபட்சமாக போர் கொடி பிடித்து வருகிறது. தங்களுக்கு 40 தொகுதிகள் தர வேண்டும் அமைச்சரவையிலும் இடம் தர வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள் .
மு க ஸ்டாலின் இதற்கு சம்மதம் தெரிவிக்காத வகையில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி போடலாம் என்றும் திரை மறைவு திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.  தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடர்பாக பேசுவதை மு.க ஸ்டாலின் விரும்பவில்லை .
இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவு வேறு காங்கிரசுக்கு சாதகமாக அமையவில்லை. கேரளாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி தான் முன்னிலையில் இருக்கிறது . காங்கிரஸ் கட்சி மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறது . இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவில் செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும் அந்த கட்சிக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது .
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளால் வெறுப்பில் இருக்கும் மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை அதிக தொகுதியை ஒதுக்கி தர முன்வரவில்லை என தெரிகிறது . இந்தியா கூட்டணி விவகாரத்தில் வேறு விதமான முடிவு எடுத்துக் கொள்ளலாம். தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் .
எனவே கூட்டணிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி ஏதாவது தோல்வி சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என மு க ஸ்டாலின் கருதுகிறார் .அந்த வகையில் திமுக தனித்து 190 தொகுதிகளில் போட்டியிடலாம் என அறிவாலயம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது . தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகள் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் திமுகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது.
நிச்சயமாக திமுக வெற்றி பெறும் என்ற தகவல் உறுதியாகி இருப்பதால் மு க ஸ்டாலின் இந்த தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் 11 தொகுதிகள் ஒதுக்கி தரவும் முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது . காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் கடந்த முறை 25 தொகுதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது பத்து முதல் 15 தொகுதி மட்டும் கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்கிறார்கள் .
இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஒத்துவரவில்லை என்றால் தாராளமாக விலகிக் கொள்ளட்டும் என்றும் மு.க ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது . இது தவிர இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஒரு தொகுதியை குறைத்து தரவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது . அதிமுகவை பொருத்த வரையில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 18 சதவீத வாக்குகளும் அதிமுகவுக்கு 20 சதவீத வாக்குகளும் கிடைத்தன .
அந்த வகையில் திமுக தனித்துவம் பெற்ற கட்சியாக இப்போது திகழ்கிறது.  எனவே கூட்டணி விஷயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்றும் முக ஸ்டாலின் முடிவு எடுத்ததாக தெரிகிறது . இது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தனித்து களத்தில் இறங்கும் வகையில் அதிமுகவின் ஓட்டுகள் தான் சிதறப்போகிறது என்ற தகவலும் திமுக மேலிடத்தற்கு கிடைத்திருக்கிறது . எனவே ஜெயலலிதா பாணியில் 190 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக தனித்து நின்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என அறிவாலயம் தரப்பில் முடிவெடுத்ததாக சொல்கிறார்கள் .
முன்னதாக 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா தரப்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அதே சமயத்தில் விஜய் கட்சிக்கு புதிய சின்னம் கிடைப்பதால் அந்த சின்னம் மக்கள் மத்தியில் மனதில் நிற்காது என்ற அடிப்படையிலும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது . அதிமுகவை பொருத்தமரையில் ஒருங்கிணைப்புக்குகு வாய்ப்பு இல்லாததால் திமுக மட்டுமே கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெறலாம் என திமுக தரப்பில் மிக பலமாக நம்புகிறார்கள் .
எனவே 190 தொகுதிகள் தவிர கூட்டணி கட்சிகளில் சிலரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையிலும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது . எனவே கூட்டணி விவகாரத்தில் மு க ஸ்டாலின் எந்த வகையிலும் விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை அதேசமயம் இந்த தேர்தலில் திமுகவின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *