
பகல்காம் படுகொலைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றிய உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் 9 இடங்களில் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.


