
சீனாவின் ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கிய சரக்கு விமானம் கடலில் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். விமானிகள் நால்வரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
துருக்கி நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 வகை எமிரேட்ஸ் சரக்கு விமானம் துபாயில் இருந்து வந்து ஹாங்காங் விமான நிலையத்தின் ஓடுபாதையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.50 மணிக்குத் தரையிறங்கியது.
அப்போது ஓடுபாதையையும் தாண்டிச் சென்று அங்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதிவிட்டுக் கடலில் விழுந்தது.
இந்த விபத்தில் மோதிய வாகனத்தில் இருந்த இருவர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் விமானத்தில் இருந்த விமானிகள் நால்வரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
கடலில் விழுந்த விமானத்தின் நொறுங்கிய பாகங்களை மீட்பது பற்றிப் பேசுவதற்காக விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹாங்காங் விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர்.



