
அவசர நிலை பிரகடனத்தின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாட்களில் மக்களின் அடிப்படை உரிமை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாதாரண குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் கூறினார்.
அவசர நிலையின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது போல இருந்தது. அவசர நிலையின் இருண்ட நாட்களை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்லது அந்தக் காலத்தில் துன்பப்பட்ட குடும்பங்கள் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.




