நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணையை அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் முன்பு கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேங்காய் எண்ணையை நியாய விலை கடைகளில் அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வலியுறுத்தியும் தேங்காய் விரை வீழ்ச்சியைத் தடுக்கவும் தேங்காய்க்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மானிய விலையில் பொதுமக்களுக்குத் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காயில் தயாரிக்கப்படும் பொருட்கள் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று
அரசின் கவனத்தை ஈர்க்க தென்னை விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் பாமாயில் அயல்நாட்டு கார்ப்பரேட் கம்பெனியிடமிருந்து ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் இறக்குமதி செய்யப்பட்டு மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு பதிலாகத் தமிழ்நாட்டு விவசாயிகளின் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டிய மத்திய அரசின் (நாப்பெட்) நிறுவனத்தில் 1 லட்சம் டன்னுக்கு மேல் இருப்பு வைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையை மத்திய மாநில அரசுகள் இணைந்து எண்ணெய் பிழிந்து மானிய விலையில் ரேஷன் கடையில் அரசு விநியோகம் செய்ய வேண்டியும் அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தென்னை விவசாய சங்க தலைவர் அப்துல் முனாப், செயலாளர் மணி மாதவன், பொருளாளர் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், கௌரவ ஆலோசகர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
