Twitter (X): இனி ஆடியோ மற்றும் வீடியோகாலில் பேசலாம்!

எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்…

எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

இந்த அம்சம் எக்ஸ் சேவையின் ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி பயனர்கள் மொபைல் போன் நம்பர்கள் இல்லாமல் தங்களின் யூசர்நேம் கொண்டே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். முன்னதாக எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்கப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் டிசைனரான ஆண்ட்ரியா கான்வே – புதிய வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களைப் பகிர்ந்து இருக்கிறார். மேலும் எக்ஸ் தளத்தில் போலி அழைப்புகளைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வசதிகளைப் பிரீமியம் சந்தா இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது.

தற்போது எக்ஸ் தளத்தில் “ஸ்பேசஸ்” எனும் அம்சம் கொண்டு பயனர்கள் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய அழைப்புகளுக்கான வசதி கொண்டு எக்ஸ் தளம் புளூஸ்கை மற்றும் திரெட்ஸ் போன்ற சேவைகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும்.

எலான் மஸ்க்-இன் எல்லாவற்றுக்குமான செயலியை உருவாக்கும் திட்டத்தின் அங்கமாகப் புதிய அழைப்புகளுக்கான வசதி பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *