Advertisements

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படுவதாகவும், அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் 5 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர்கள் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisements


