அரங்கத்தை அதிர வைத்த ஃபஹத் ஃபாசில்..!

தென்னிந்திய சினிமாவின் நடிப்பு அசுரன் என்று கொண்டாடப்படும் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் சமீபத்திய டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில், ‘வேலைக்காரன்’, ‘மாமன்னன்’, ‘வேட்டையன்’, ‘மாரீசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஃபஹத் ஃபாசில். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

‘புஷ்பா 2’ திரைப்படம் மூலம் தெலுங்கில் தனது மார்க்கெட்டை விரிவுப் படுத்திக் கொண்டார். மொழிகளுக்கு அப்பாற்பட்டு தனது தனத்துவமான நடிப்பால் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் ஃபஹத் பாசில்.

அந்த வரிசையில், ஃபஹத் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் மலையாள திரைப்படம் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பகத் பாசில் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாக நடனம் போட்டனர்.பகத் பாசிலின் இந்த உற்சாக நடன வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அவரது நடன ஸ்டேப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஆவேஷம்’ படத்தில் ஃபஹத் பாசிலின் நடனம் பேசப்பட்டது. திரையில் பார்த்த நடனத்தை நேரில் பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *