
சென்னையில் திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ள சட்டத் திருத்த முன்வரைவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் உறுப்பினர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்யும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.



