
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்வதற்கான இணையதளத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் செய்து வைத்தார்.
டெல்லியில் நேற்று நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இணையதளத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமான வக்பு சொத்துகளின் அர்த்தமுள்ள பயன்பாட்டை, கருத்தில் கொண்டு ‘உமீத்’ வலைதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் 6 மாதங்களுக்குள் அனைத்து வக்பு சொத்துக்களும் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்படும் என கூறினார். மேலும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் வக்பு சொத்துக்கு 17 இலக்கங்கள் கொண்ட பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும் என்றும் அதன் மூலம் அந்த சொத்து எந்த மாநிலம், மற்றும் மாவட்டத்தில் உள்ளது என்பதை கண்டிறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


