Bomb Threat:தொடர் வெடிகுண்டு மிரட்டல்… திருப்பதி கோவிலுக்குக் கூடுதல் பாதுகாப்பு!

Advertisements

திருப்பதி:திருப்பதியில் உள்ள வரதராஜ சாமி கோவில், இஸ்கான் கோவில் மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது . இதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து பக்தர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லையெனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருப்பதி மலை முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சிறப்பு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி தலைமையிலான கமாண்டோ பாதுகாப்பு படையினர் இரவு நேரத்தில் திருப்பதி மலை முழுவதும் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமலை முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்டோபஸ் கமாண்டோ படையினருடன் மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமலையில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக 28 இடங்களில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *