BJP MPs: 10 எம்.பிக்கள் ராஜினாமா!

பாஜக எம்.பிக்கள் 12 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர்களில் 10 பேர் தங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

புதுடெல்லி: சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சில பாஜக எம்.பிக்கள், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டனர்.

இதில், பாஜக எம்.பிக்கள் 12 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர்களில் 10 பேர் தங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில், மத்திய மந்திரிகளான நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல் ஆகியோரும் அடங்குவர். ராஜினாமா கடிதம் அளிக்காத பாபா பாலாகாந்த் மற்றும் ரேனுகா சிங் ஆகியோரும் விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.பிக்கள் சிலர் முதல்-மந்திரி ஆகும் கனவில் இருப்பதால் மூன்று மாநிலங்களிலும் முதல்-மந்திரியாக பாஜக யாரை தேர்வு செய்ய இருக்கிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *