டெல்லியில் தேர்தல் விதிகளை பாஜக மீறியதாக புகார்!

Advertisements

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர்.

இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலைத் தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிர்மன் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் சாந்தினி சவுக் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனாவும் ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா,

டெல்லி மக்களிடம் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். டெல்லி மக்கள் வாக்களிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி சட்டசபை தொகுதியின் வேட்பாளருமான அதிஷி தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டெல்லியில் இந்தத் தேர்தல் வெறும் தேர்தல் அல்ல, இது தர்மயுத்தம். இது நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையேயான சண்டை.

ஒரு பக்கம், வளர்ச்சிக்காகப் பாடுபடும் படித்தவர்கள், இன்னொரு பக்கம், ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளனர்.

குண்டர்களுக்கு வாக்களிக்காமல், வேலை செய்பவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டெல்லி காவல்துறை வெளிப்படையாகப் பா.ஜ.க.வுக்காக வேலை செய்கிறது என்று அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *