
பீகாரின் மோதிகாரியில் ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். பீகாரில் ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதற்காக மோதிகாரிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் இணைந்து வாகனத்தில் பேரணியாகச் சென்றார். அப்போது சாலையின் இருபுறமிருந்தும் மக்கள் பூமாரி பொழிந்து அவர்களை வரவேற்றனர்.
விழா மேடையில் பிரதமர் மோடிக்கு ஓவியங்களும் சிலைகளும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.பீகாரின் தர்பங்காவில் கட்டப்பட்டுள்ள மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பாட்னாவில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் பயிற்சி நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பீகாரின் பல்வேறு நகரங்களில் இருந்து பிற நகரங்களுக்குச் செல்லும் நான்கு அமிர்தபாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.



